வாக்காளர் பட்டியல் திருத்தம்: 12 மாநில நிர்வாகிகளுடன் காங்., நாளை ஆலோசனை
வாக்காளர் பட்டியல் திருத்தம்: 12 மாநில நிர்வாகிகளுடன் காங்., நாளை ஆலோசனை
ADDED : நவ 16, 2025 11:39 PM

புதுடில்லி: எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடக்கும், 12 மாநிலங்களைச் சேர்ந்த கட்சியின் மாநிலத் தலைவர்களுடன், காங்., மேலிடம் நாளை ஆலோசனை நடத்துகிறது.
பீஹாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பின், சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
பீஹாரைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி தீவிரமாக நடக்கிறது. இதில், தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வரும் தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, ம.பி., - உ.பி., உட்பட 12 மாநிலங்களின் கட்சி நிர்வாகிகளுடன், காங்., மேலிடம் நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறது. டில்லியில் நடக்கும் இந்த ஆலோசனையில், கட்சியின் மாநில தலைவர்கள், செயலர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

