தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வலை வளை; பிரபலம் என்றாலே 'பிராப்ளம்' தான்!

வலை வளை; பிரபலம் என்றாலே 'பிராப்ளம்' தான்!

வலை வளை; பிரபலம் என்றாலே 'பிராப்ளம்' தான்!


UPDATED : செப் 28, 2026 11:13 AM

ADDED : செப் 28, 2026 11:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 11:13 AM ADDED : செப் 28, 2026 11:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது சிறப்பு நிருபர்-

பிரபலம் என்றாலே 'பிராப்ளம்' தான்!

ஹரியானாவின் சமூக வலைதள பிரபலம் டாக்டர் ஜாஸ்மின், தன் திருமணத் துக்கு வரன் தேடுவதில் இருக்கும் சிரமத்தை கூறும் வீடியோ, கவனம் பெற்றுள்ளது. 'வாழ்க்கையில் வெற்றிகரமான ஒரு பெண் சுதந்திரமாக இருப்பது, அவர் திருமணத்துக்கு தகுதியானவரா என்று பலரையும் கேள்வி கேட்க வைக்கிறது' என்கிறார் அவர்.Image 1623958'வரன் தேடும்போது, பெண்ணின் சாதனைகளே அவருக்கான தடையாக இருக்கின்றன. சமூக வலைதளத்தில் பல லட்சம் பேர் பின்தொடர்வதால், அந்த பெண் திருமணத்துக்கு தகுதியவற்றவர் ஆகி விடுவாரா' என்று கேட்கிறார், ஜாஸ்மின்.

'உங்களுக்கு இரண்டு லட்சம் பின்தொடர்வோரும், இரண்டு லட்சம் பிரச்னைகளும் கிடைத்தால் வாழ்த்துகள்; உங்கள் முடிவு முற்றிலும் சரியானது. என்னைப் போன்ற பெண்ணை மதித்துப் போற்றும் திறன் உங்களிடம் இல்லை' என்று தன்னை நிராகரிப்பவர்களுக்கு அவர் கூறும் வீடியோ, டிரெண்டிங்கில் உள்ளது.

ஜெய்ப்பூர் மெட்ரோவுக்கு சபாஷ்

இ ந்தியாவின் மெட்ரோ ரயில் நிலையங்கள் பற்றி வெளிநாட்டினர் வெளியிட்ட வீடியோக்கள், வைரல் ஆவது வாடிக்கை தான். அந்த வகையில், ஜெய்ப்பூர் மெட்ரோவில் பயணித்த ரஷ்ய பெண் பயணி வெரா ரொகபெவா, தன் அனுபவம் பற்றி வெளியிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகியுள்ளது.Image 1623959'வெரி குட். பிளாட்பார்ம் மிகச்சிறப்பாக இருக்கிறது. 10க்கு 10 மதிப்பெண் தரலாம்' என்கிறார், வெரா. ஜெய்ப்பூர் மெட்ரோவில் இருக்கும் வசதிகளை, துபாய் மெட்ரோவுடன் ஒப்பிடலாம் என்று உறுதியாக கூறுகிறார் அவர். வலைதளவாசிகள், அவருக்கு வரவேற்பும், வாழ்த்தும் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

கவனத்தை ஈர்த்த ஜெய்ஸ்ஸ்ரீராம்

Image 1623960ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடித்த ராமாயணா படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூ டியூபர் மிஸ்டர் பீஸ்ட் கலந்து கொண்டார். அப்போது அவர், 'ஜெய்ஸ்ரீராம்' என்று முழங்கினார்; பார்வையாளர்கள் அதை உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கவனத்தை ஈர்த்துள்ளது.

ராஜா, ராணியுடன் படைவீரர்கள்; தினமும் களம் காணும் மேம்பாலம்

மேற்கு வங்க மாநிலம், கொல்கட்டாவின் நெரிசல் மிகுந்த சந்திப்பில் அமைந்துள்ளது கரியாஹத் மேம்பாலம். அதன் கீழ் பகுதி காலியிடத்தில் வீரர் - வீராங்கனையர், செஸ் போட்டியில் மூழ்கி இருக்கின்றனர். 500 ரூபாய் ஆண்டு சந்தா, ஆட்டத்துக்கு 10 ரூபாய் கொடுத்து யாரும் விளையாடலாம்.Image 1623961

போக்குவரத்து நெரிசல், வாகன இரைச்சலை பொருட்படுத்தாமல் நுாற்றுக்கணக்கான வீரர் - வீராங்கனையர் செஸ் விளையாடுவதை காண்பதே ஒரு பிரமாண்டமாக இருக்கிறது. 'தினமும் விளையாட வருபவர்கள் மாறிக் கொண்டே இருக்கின்றனர். பல்லாண்டுகளாக மாறாமல் இருப்பது, கரியாஹத் மேம்பாலம் ஒன்று தான்' என்ற செய்தி, வைரலாகியுள்ளது.

'ராஜா, ராணி, மந்திரி, யானைப்படை, குதிரைப்படை, வீரர்கள் இன்னும் வாசம் செய்யும் சிறப்புக்குரிய ஒரே மேம்பாலம் இதுதான்' என்கிறார், வலைதளவாசி ஒருவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us