தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிற்பக்கலையில் முதுகலை படிப்பு

சிற்பக்கலையில் முதுகலை படிப்பு

சிற்பக்கலையில் முதுகலை படிப்பு


UPDATED : செப் 27, 2026 11:27 PM

ADDED : செப் 27, 2026 10:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2026 11:27 PM ADDED : செப் 27, 2026 10:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையில், இரண்டாண்டு முதுகலை பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லுாரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லுாரியில், இளங்கலையில் மரபு கட்டடக்கலை, வண்ணக்கலை, மரபு சிற்பக்கலை, கற்சிற்பம் உட்பட, பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், இக்கல்லுாரில் நடப்பு கல்வியாண்டு முதல், முதுநிலை மரபு கட்டடக்கலை, மரபு சிற்பக்கலை, மரபு வண்ணக்கலை போன்ற பாடப்பிரிவுகளில், இரண்டாண்டு முதுகலை பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையில், இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள், முதுகலை படிப்பில் சேர, https://artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில், அடுத்த மாதம், 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, கலை, பண்பாட்டு துறை தெரிவித்துள்ளது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us