ADDED : மார் 05, 2024 04:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் தனக்கு அளிக்கப்படாததை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சீமான். பொது சின்னத்துக்கு அங்கீகரிக்கப்படாத கட்சிகள் உரிமை கொண்டாட முடியாது என தேர்தல் கமிஷன் சொல்ல, மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
குறிப்பிட்ட காலத்திற்குள் நாம் தமிழர் கட்சி சின்னம் கேட்டு விண்ணப்பிக்காததால், அச்சின்னம் கர்நாடக கட்சிக்கு கொடுக்கப்பட்டு விட்டது. குறிப்பிட்ட காலத்தில், வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்தேன் என சீமான் சொல்லும் விளக்கத்தை, தேர்தல் கமிஷன் ஏற்க மறுத்தது.
இதையடுத்து, தன் தவறை மறைத்து, அடுத்தவர் மீது பழிபோடுகிறார் என, சீமானை கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை.
- நமது நிருபர் -

