மதுரை மாநகராட்சி புதிய மேயர் யார்? கோடிகளில் துவங்கியாச்சு பேரம்: தி.மு.க., தலைமை மவுனத்தால் அதிருப்தி
மதுரை மாநகராட்சி புதிய மேயர் யார்? கோடிகளில் துவங்கியாச்சு பேரம்: தி.மு.க., தலைமை மவுனத்தால் அதிருப்தி
ADDED : அக் 20, 2025 01:20 AM

மதுரை: மதுரை மாநகராட்சி புதிய மேயர் யார் என்பதில் தி.மு.க., தலைமை இழுத்தடிப்பதால் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு மறைமுக பேரம் துவங்கியுள்ளது. இந்த 'பேரப் புயலில்' தகுதியான கவுன்சிலர்கள் ஒதுங்கிவிட்டதாக நிர்வாகிகள் புலம்புகின்றனர்.
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு புகாரில் இந்திராணி, மேயர் பதவியை இழந்தார். இந்த விவகாரத்தில் அ.தி.மு.க., அழுத்தம் காரணமாக இதுவரை மேயர், 5 மண்டலம், 2 நிலைக் குழுத் தலைவர்கள் என மாநகராட்சி கவுன்சில் கூடாரமே கா லியாகி விட்டது; பலரும் ராஜினாமா செய்து விட்டனர்.
மாநகராட்சியின் முறைகேடு பிரச்னை அ.தி.மு.க.,வுக்கு சாதகமாகிவிடக் கூடாது என தி.மு.க., தலைமை, எத்தனைதான் காய் நகர்த்தினாலும், 'யார் தவறு செய்தாலும் முதல்வர் நடவடிக்கை டுப்பார்' என அமைச்சர் வேலுவும், மற்றொரு நிகழ்ச்சியில் 'மதுரை மேயர் குடும்பச் சூழலால் ராஜினாமா செய்தார்' என அமைச்சர் நேருவும் முரணான கருத்துக்களை தெரிவித்து உட்கட்சியில் நிலவி வரும் குழப்பத்தை வெளிப் படுத்தினர்.
மதுரையின் புதிய மேயரை தேர்வு செய்யும் விவகாரத்திலும் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் இடையே நிலவி வரும் 'ஈகோ' யுத்தத்தால் தி.மு.க., தலைமை, எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறுகிறது. இதுதான் வாய்ப்பு என மேயர் பொறுப்பை தற்போது துணை மேயராக உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் நாகராஜன் சுறுசு றுப்பாக கவனித்து வருகிறார்.
'அடமானம்'
இதற்கிடையே, மேயர் பதவிக்காக உள்ளூர் கட்சிப் பிரமுகர்கள் கோடிக்கணக்கில் கவுன்சிலர்கள் சிலரிடம் பேரம் நடத்தி வருகின்றனர். அவர்கள், தலைமையில் உள்ள சிலருக்கு ஒரு தொகை, மாவட்ட நிர்வாகிகளுக்கு ஒரு தொகை என்ற ரீதியில் பேரம் பேசி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் புதிய மேயர் நியமனத்தில் தி.மு.க., தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மதுரையில் ஆளுங்கட்சிக்குள் ஒற்றுமை இல்லாததால், 69 கவுன்சிலர்களை வைத்துள்ள தி.மு.க., நான்கு கவுன்சிலர்களை கொண்டுள்ள மார்க்சிஸ்ட்களிடம் மேயர் பதவியை அடமானம் வைத்து விட்டது என தி.மு.க., நிர்வாகிகளே கொந்தளிக்க ஆரம்பித்து உள்ளனர்.
இது குறித்து மூத்த தி.மு.க., வினர் கூறியதாவது:
மதுரை மேயரை தேர்வு செய்யும் விஷயத்தில் கட்சி நலன் என்பதை மறந்து, அமைச்சர்கள் தங்கள் பலத்தை காட்டவே நினைக்கின்றனர்.
முறைகேடு அமைச்சர் தியாகராஜன் இதுவரை மேயர், பகுதிச் செயலர், மண்டல தலைவர், நிலைக் குழுத் தலைவர்கள் என அவரது ஆதரவாளர்களை நியமித்தார். ஆனால் மேயர், மண்டல தலைவர், நிலைக்குழு தலைவர்கள் என பலர் முறைகேடு சர்ச் சைகளில் சிக்கி பதவியிழந்துள்ளனர்.
தற் போதும் மேயர் பதவிக்கு அவரது சிபாரிசை கட்சி எதிர்பார்க்கிறது. இதுதான் கட்சியின் நிலை. இவர்களை தவிர்த்து தி.மு.க., தலைமையே ஒரு முடிவுக்கு வரவேண்டும். முறைகேடு புகார் இல்லாத கவுன்சிலர்களை பரிசீலனை செய்து மேயர் வாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.