நல்ல திட்டத்தை சிதைப்பதில் அரசுக்கு ஏன் இந்த வெறி: திமுக ஸ்டாலின் ஆவேசம்
நல்ல திட்டத்தை சிதைப்பதில் அரசுக்கு ஏன் இந்த வெறி: திமுக ஸ்டாலின் ஆவேசம்
ADDED : நவ 14, 2026 06:09 AM

சென்னை: 'அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற, 164 மாணவர்களில், 65 பேருக்கு மட்டுமே உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் மீது, த.வெ.க., அரசுக்கு ஏன் காழ்ப்பு; உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னரும், கல்வி கட்டண தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து, மன உளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?
இந்த கல்வியாண்டில், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற, 164 மாணவர்களில், 65 பேருக்கு மட்டுமே, இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலமாகி உள்ளது. மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழிபோட, இந்த அரசு உத்தேசித்துள்ளது?
இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி, பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர் கல்விக் கனவை நோக்கி எப்படி உழைப்பர்? தி.மு.க., அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தை சிதைப்பதில், த.வெ.க., அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூக நீதியை நடைமுறையில் காண முடியவில்லையே? இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
