sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 26, 2026 ,சித்திரை 13, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பட்டாவில் நிலத்தின் அளவு குறைவாக இருப்பது ஏன்? அதிகாரிகள் ஆய்வு துவக்கம்

/

பட்டாவில் நிலத்தின் அளவு குறைவாக இருப்பது ஏன்? அதிகாரிகள் ஆய்வு துவக்கம்

பட்டாவில் நிலத்தின் அளவு குறைவாக இருப்பது ஏன்? அதிகாரிகள் ஆய்வு துவக்கம்

பட்டாவில் நிலத்தின் அளவு குறைவாக இருப்பது ஏன்? அதிகாரிகள் ஆய்வு துவக்கம்


UPDATED : மே 28, 2012 01:50 AM

ADDED : மே 28, 2012 01:13 AM

Google News

UPDATED : மே 28, 2012 01:50 AM ADDED : மே 28, 2012 01:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில், வருவாய்த் துறையினரால் வழங்கப்படும் பட்டாக்களில், விற்பனை பத்திரத்தில் உள்ளதைவிட, நிலத்தின் அளவு குறைவாக குறிப்படப்படுவதாக, பல்வேறு தரப்பனரும் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், 2,400 சதுர அடி நிலம் வைத்திருப்பவருக்கு, 2,152 சதுர அடிக்கு மட்டுமே பட்டா கிடைக்கிறது.

தமிழகம் முழுவதும், விவசாய நிலங்களாக இருந்த பல ஏக்கர் நிலங்கள் இப்போது, ஒரு கிரவுண்ட், அரை கிரவுண்ட் என, வீட்டு மனைகளாக பரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இவ்வாறு நிலம் வாங்கும் போது, அது தொடர்பான பத்திரப்பதிவு முடிந்தவுடன், பட்டா பெற வருவாய்த் துறையை அணுக வேண்டும்.

பட்டாவில் என்ன இருக்கும்?இதன்படி, வழங்கப்படும் பட்டாக்களில், பலரும், தங்கள் பெயர், நிலத்தின் சர்வே எண், அதன் அமைவிடம் ஆகியவை தொடர்பான விவரங்களை மட்டுமே கவனிக்கின்றனர். அதில் குறிப்படப்பட்டிருக்கும் நிலத்தின் அளவு சரியானதா என்பதை, யாரும் கவனிப்பதில்லை.பதிவு செய்யப்படும் பத்திரத்தில், நிலத்தின் அளவு சதுர அடியிலும், கிரவுண்ட் அடிப்படையிலும் குறிப்படப்பட்டிருக்கும். ஆனால், பட்டாவில், நிலத்தின் அளவு ஹெக்டேர், ஏர், ஏக்கர் அளவுகளில் குறிப்படப்பட்டிருப்பதே இதற்கு காரணம்.

என்ன நடக்கிறது?உதாரணமாக, 2,400 சதுர அடி கொண்ட ஒரு கிரவுண்ட் நிலத்தை வாங்கும் @nextcolumn@ ஒருவர், அதற்கு பட்டா கோரி, வருவாய்த் துறை அலுவலகத்தில் விண்ணப்பத்தால், அவரது நிலத்தின் அளவு, 2.0 ஏர் என குறிப்படப்பட்டு பட்டா வழங்கப்படுகிறது. இதை, சதுர அடியாக கணக்கிட்டால், (ஒரு ஏர் : 1,076 சதுர அடி) அவருக்கு, 2,152 சதுர அடி அளவுக்கே பட்டா வழங்கப்படுகிறது. இது, ஒரு கிரவுண்டுக்கு, 248 சதுர அடி குறைவாகும்.

எப்படி நடக்கிறது?இது குறித்து, சென்னையை சேர்ந்த கட்டட அமைப்பயல் வல்லுனர் சோரீஸ் பர்னபாஸ் கூறியதாவது:சென்னைக்கு வெளியில், பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்ட, 100க்கும் மேற்பட்ட பட்டாக்களை ஆய்வு செய்ததில், இத்தகைய குறைபாடு இருப்பது தெரியவந்தது. உதாரணமாக,, திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டு கிராமத்தில், சர்வே எண்: 66/3 ஏ8 நிலத்தை, தங்கராஜ் என்பவர் வாங்கினார்.பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின்படி, இந்த நிலத்தின் பரப்பளவு, 5,127 சதுர அடி. இதற்கு வழங்கப்பட்ட பட்டாவில், நிலத்தின் பரப்பளவு, 4.50 ஏர் என்று குறிப்படப்பட்டுள்ளது. இந்த அளவை சதுர அடியாக மாற்றினால், 4,842 சதுர அடி என வருகிறது. இதில் மட்டும், 285 சதுர அடி நிலம் பட்டாவில் வரவில்லை.இதேபோல, ஒவ்வொரு பட்டாவிலும், ஒரு கிரவுண்டுக்கு, 248 சதுர அடி வீதம் குறைவாக குறிப்படப்படுகிறது. இத்தகைய நிலங்களில் வீடு கட்ட திட்ட அனுமதி வாங்கும் போது, சிக்கல் எழுகிறது. பெரும்பாலும், ஒரு கிரவுண்ட், அரை கிரவுண்ட் என, நிலங்கள் விற்பனை @nextcolumn@ செய்யப்படுவதால், பட்டாவில் வராமல் போகும் நிலத்தின் அளவு முக்கியத்துவம் பெறுகிறது. இப்போதைய சூழலுக்கு ஏற்ப, கணக்கிடும் முறையில் மாற்றம் வராததே இதற்கு காரணம்.இவ்வாறு சோரீஸ் பர்னபாஸ் கூறினார்.

தீர்வு எப்போது?இது குறித்து பெயர் குறிப்பட விரும்பாத வருவாய்த் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், பல ஆண்டு காலமாக, ஹெக்டேர், ஏர், ஏக்கர் ஆகிய அளவுகளிலேயே நிலங்கள் கணக்கிடப்பட்டன. இதில், ஏர், ஏக்கர் ஆகிய அலகுகளில் அளவிடும்போது, 0.1, 0.2 போன்ற அளவுகளை குறிப்படுவதில், சில நடைமுறை சிக்கல்கள் எழுந்தன.எனவே, இதை கருத்தில் கொண்டு, பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களில் குறிப்படும்போது, 0.1 முதல் 0.5 வரையிலான அளவுகளை முழுமை செய்வது (ரவுண்ட் ஆப்) என்ற அடிப்படையில், இவற்றை, 0.0 என கணக்கில் எடுத்துக் கொள்வது என்றும், 0.6 முதல் 0.9 வரை உள்ள இலக்கங்களை, 0.5 ஆக கணக்கில் எடுத்துக் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.பல ஆண்டுகளுக்கு முன், நிர்வாக வசதிக்காக இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது. குறைந்த பரப்பளவு நிலங்களுக்கும், இந்த முடிவே நடைமுறைப்படுத்தப்படுவதால், சிக்கல் ஏற்படுவதாக இப்போது தான் புகார்கள் வருகின்றன. பட்டாவில் குறிப்படும் அளவுகளில், குறைந்தபட்ச அளவுகளை கணக்கில் எடுத்துக் கொள்வது குறித்து, அதிகாரிகள் நிலையில் ஆய்வு செய்து வருகிறோம். அரசின் வழிகாட்டுதல்கள் பெறப்பட்டு, இப்பரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

- வி.கிருஷ்ணமூர்த்தி -






      Dinamalar
      Follow us