சொட்டு நீரின்றி வறண்டு கிடக்கும் 4,681 பாசன ஏரிகள் துார்வாரப்படுமா?
சொட்டு நீரின்றி வறண்டு கிடக்கும் 4,681 பாசன ஏரிகள் துார்வாரப்படுமா?
ADDED : செப் 18, 2026 04:56 AM

சென்னை: தமிழகத்தில், 4,681 பாசன ஏரிகள் சொட்டு நீரின்றி வறண்டு கிடக்கின்றன .
நீ ர்வளத்துறை பராம ரிப்பில், மாநிலம் முழுதும் 1 4 ஆயிரத்து 141 பாசன ஏரிகள் உள்ளன. இவற்றின் வாயிலாக, சாகுபடிக்கு தேவையான நீர் மட்டுமின்றி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் இந்த ஏரிகள் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவில் பெய்யாததால், பல ஏரிகளுக்கு நீர்வரத்து கிடைக்கவில்லை.
இதனால், பல ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 4,681 ஏரிகள், ஒரு சொட்டு நீரின்றி முழுமையாக வறண்டு கிடக்கின்றன.
அதிகபட்சமாக, மதுரை மாவட்டத்தில் 1,157 ஏரிகளும், தஞ்சாவூர் - 551, சிவகங்கை - 533, திருவண்ணாமலை - 511, திருநெல்வேலி - 331, திருவள்ளூர் - 246, தர்மபுரி - 168, புதுக்கோட்டை - 166, கள்ளக்குறிச்சி - 134, கடலுார் - 121, விருதுநகர் மாவட்டத்தில் 110 ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன. மேலும், 6,253 ஏரிகள் வறண்டு விடும் கட்டத்தை நெருங்கி வருகின்றன.
'எல் நினோ' பாதிப்பால், நடப்பாண்டு வடகிழக்கு பருவ மழை அதிகளவில் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வறண்டு கிடக்கும் ஏரிகளை துார்வாரினால், கூடுதல் நீரை சேமித்து, ஆண்டு முழுதும் பாசனம், குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியும்; நிலத்தடி நீர் மட்டமும் அதிகரிக்கும்.
எனவே, இந்த ஏரிகளை துார்வாருவதற்கான பணிகளை, நீர்வளத் துறை விரைந்து துவங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
