கோவில் நிலங்களை தாரை வார்ப்பதா? ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு
கோவில் நிலங்களை தாரை வார்ப்பதா? ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 12, 2026 03:12 AM

- நமது நிருபர் -
'தமிழகத்தில் கோவில் நிலங்களை தனியாருக்கு பட்டா போட்டு தரக் கூடாது,' என, ஹிந்து அமைப்புகள் எச்சரித்து உள்ளன.
ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை: கரூரில் நான்கு பிரதான கோவில்களுக்கு சொந்தமான, 3,084 ஏக்கர் நிலத்தை சிலர் ஏமாற்றி உரிமையாக்கி கொண்டனர்.
அவர்களுக்கும் கோவில்களுக்கும் தொடர்பு இல்லை. அந்த ஆக்கிரமிப்பாளர்கள், கோவில் சொத்தை சொந்தமாக்க விதிக்கப்பட்டிருந்த தடையை, ஹிந்து சமய அறநிலையத்துறை தற்போது விலக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்ட விரோதம் எனில், கோவில் நில ஆக்கிரமிப்பை அரசு எப்படி அனுமதிக்கலாம்?
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தமிழக அமைப்புச் செயலர் பாலாஜி: 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3,084 ஏக்கர் கோவில் சொத்தை, முதல்வர் விஜய் தாரை வார்த்துள்ளார். முதல்வரின் செயல், ஹிந்துக்கள் மனதை பாதித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இல்லையெனில், அனைத்து ஹிந்து அமைப்புகள் ஆதரவுடன் தொடர் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கரூரில் பேட்டியளித்த காங்., - எம்.பி., ஜோதிமணி, தொடர் கோரிக்கைகளின் அடிப்படையில், கோவில் இனாம் நிலங்கள் 3,084 ஏக்கர் பட்டா நிலங்களுக்கான பத்திரப் பதிவுக்கான தடையை த.வெ.க., அரசு நீக்கியுள்ளது.
ஆனால் கரூர் மாவட்டத்தில், 25,௦௦௦ கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலம் தாரை வார்க்கப்பட்டதாக பா.ஜ., திட்டமிட்டு பொய்யை பரப்பி வருகிறது. உண்மை நிலையை தெரிந்து, பா.ஜ.,வினர் பேச வேண்டும்,' என்றார்.
