sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

அ.தி.மு.க., - பா,ஜ., ஆட்டத்தில் த.வெ.க., சிக்குமா; தப்புமா?

/

அ.தி.மு.க., - பா,ஜ., ஆட்டத்தில் த.வெ.க., சிக்குமா; தப்புமா?

அ.தி.மு.க., - பா,ஜ., ஆட்டத்தில் த.வெ.க., சிக்குமா; தப்புமா?

அ.தி.மு.க., - பா,ஜ., ஆட்டத்தில் த.வெ.க., சிக்குமா; தப்புமா?

1


ADDED : அக் 11, 2025 04:41 AM

Google News

1

ADDED : அக் 11, 2025 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் துயர சம்பவத்தை மையப்படுத்தி, கூட்டணிக்குள் இழுக்க, அ.தி.மு.க., --- பா.ஜ., நடத்தும் ஆட்டத்தில், த.வெ.க., சிக்குமா அல்லது தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கரூர் சம்பவத்தை தொடர்ந்து, த.வெ.க., மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நெருக்கடியை பயன்படுத்தி, அக்கட்சியை கூட்டணிக்குள் இழுக்க, அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் காய் நகர்த்தி வருகின்றன.

திணறல்


கரூர் சம்பவத்திற்கு பின் ஒரு வார காலத்துக்கு மேலாக வெளியே தலைகாட்டாமல் இருந்த த.வெ.க., தலைவர் விஜய், சமீபத்தில் தான் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம், மொபைல் போனில் பேசி ஆறுதல் கூறினார். இந்த சம்பவத்திற்கு பின் கட்சிக்குள்ளும், பொது வெளியிலும் ஏற்பட்ட நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் விஜய் திணறி வந்தார்.

சமீபத்தில், குமாரபாளையத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசிய கூட்டத்தில், த.வெ.க., கொடியுடன், அக்கட்சியினர் பங்கேற்ற செய்தி வெளியானது. ஏற்கனவே விஜயிடம், பழனிசாமி மகன் மிதுன் பேசியுள்ள நிலையில், பழனிசாமியும் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் சந்தித்து பேசிய தகவலும் வெளியாகி இருக்கிறது.

இதற்கிடையில், கரூர் சம்பவ விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றி, விஜயை எப்போதும் தன் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என, பா.ஜ., தரப்பிலும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:


பா.ஜ.,வை கொள்கை எதிரி என கடுமையாக விமர்சித்த விஜய், தற் போது அமைதியாக இருக்கி றார். சிவகங்கையில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், சி.பி.ஐ., விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்ததை எதிர்த்த விஜய், கரூர் சம்பவத்துக்கு மட்டும் சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்றார்.

அதை வலியுறுத்தி, 'கரூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு வேண்டாம்; சி.பி.ஐ., விசாரணையே வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தை த.வெ.க., அணுகியிருக்கிறது. இந்த நிலைப்பாட்டை விஜய் எடுப்பதற்கு, பா.ஜ., பின்னணி தான் காரணம்.

ஆட்டம் ஆரம்பம்


தேர்தல் கமிஷனில் நிலுவையில் இருந்த, இரட்டை இலை வழக்கை பயன்படுத்தி, அ.தி.மு.க.,வை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது போல, கரூர் விவகாரத்தை சி.பி.ஐ.,க்கு மாற்றி, விஜயையும் தன் கட்டுப்பாட்டில் வைக்க, பா.ஜ., திட்டமிட்டு, தன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இப்படி அ.தி.மு.க., - பா.ஜ., இரு தரப்பும் விஜயை இழுக்க ஆடும் ஆட்டத்தில், அவர் சிக்குவாரா அல்லது தப்பி விடுவாரா என்பது விரைவில் தெரிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us