கர்நாடகாவை போல தமிழகத்திலும் ஜன., 22ல் சிறப்பு பூஜை நடக்குமா?
கர்நாடகாவை போல தமிழகத்திலும் ஜன., 22ல் சிறப்பு பூஜை நடக்குமா?
ADDED : ஜன 08, 2024 05:14 AM

பெங்களூரு : அயோத்தியில், ராமர் கோவில் திறப்பு விழா நடக்கும் நாளன்று, கர்நாடக ஹிந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட, அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல, தமிழகத்திலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுமா என, பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. வரும் 22ம் தேதி, உ.பி., மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் நடக்கிறது.
இந்நிலையில், கர்நாடக மாநில ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவு:
![]() |
சரியாக, இதே நேரத்தில், கர்நாடக ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட, அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், மஹா மங்கள ஆரத்தி நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராமர் கோவில் திறப்பு நாளன்று, காங்., ஆட்சி நடக்கும் கர்நாடகாவில், சிறப்பு பூஜைகளுக்கு மாநில அமைச்சரே உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல, 'தமிழகத்திலும் அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும்' என்ற கோரிக்கை, பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.