தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/இந்திய மருத்துவம் சூப்பர்: அமெரிக்க பெண் பாராட்டு

இந்திய மருத்துவம் சூப்பர்: அமெரிக்க பெண் பாராட்டு

இந்திய மருத்துவம் சூப்பர்: அமெரிக்க பெண் பாராட்டு

2


UPDATED : நவ 01, 2026 05:33 AM

ADDED : நவ 01, 2026 04:50 AM

Follow on GoogleFavourite on Google

2

UPDATED : நவ 01, 2026 05:33 AM ADDED : நவ 01, 2026 04:50 AM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கல் நெஞ்சம் என்ன செய்யும்?: கொந்தளித்த வலைதளவாசிகள்


மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான, 'சொமேட்டோ டெலிவரி' ஊழியர் நிஹிர், 50 ரூபாய் மதிப்பிலான மேகி ஆர்டரை டெலிவரி செய்ய சென்ற நிகழ்வு வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. 'என்னால் படிகளில் ஏறி மேலே வர முடியாது, கீழே வந்து பார்சலை வாங்கிக்கொள்ளுங்கள்' என்று அவர் வேண்டுகோள் வைத்ததை ஏற்க, வாடிக்கையாளர் மறுத்து விட்டார். வேறு வழியில்லாத நிலையில், லிப்ட் இல்லாத அந்த அபார்ட்மென்ட் மாடிக்கு சிரமப்பட்டு சென்றார் நிஹிர். வீட்டு வாசலை அவர் அடைந்தபோது, குறிப்பிட்ட அந்த ஆர்டர் ரத்து செய்யப்பட்டிருந்தது. வேதனை அடைந்த நிஹிர், இது பற்றிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். வலைதளவாசிகள் பலரும், அவருக்கு ஆதரவாகவும், வாடிக்கையாளரை கல் நெஞ்சர் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்திய மருத்துவம் சூப்பர்: அமெரிக்கப் பெண் பாராட்டு


பெங்களூரு மருத்துவமனையில் நடந்த நண்பரின் கண் அறுவை சிகிச்சைக்கு துணையாக சென்றார் அமெரிக்கப் பெண் அலிசன்; கிட்டப்பார்வையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், 'நமக்கும் கண் பரிசோதனை செய்யலாமே' என்ற ஆர்வத்தில் செய்து பார்த்தார். ஸ்கேன் முடிவில், அறுவை சிகிச்சை செய்யலாம் என்று கூறிய டாக்டர்கள் செலவையும் தெரிவித்தனர். அமெரிக்காவை விட செலவு பல மடங்கு குறைவு என்பதால் உடனே அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டார். சிகிச்சை முடிந்த 7 நாளில், அவரது இரு கண்களிலும் 100 சதவீதம் பார்வை தெளிவானது. 'காப்பீடு இல்லாதபோதும் எளிதாக சிகிச்சை கிடைத்தது, ஒரு மாதத் தொடர் சிகிச்சையும் குறைந்த கட்டணத்திலேயே அடங்கியிருந்தது. அமெரிக்க மருத்துவத்தைவிட இது மிகச் சிறப்பு' என்று இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட பதிவு, டிரெண்டிங் ஆகியுள்ளது.

சைவ பிரியாணியில் சிக்கன்: விமான நிலையத்தில் கொடுமை


பெங்களூரு விமான நிலைய உணவகத்தில் ஆர்டர் செய்த சைவ பிரியாணியில் சிக்கன் துண்டுகள் இருந்ததாக, வாரணாசியைச் சேர்ந்த குடும்பத்தினர் தெரிவித்த புகார், வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. 'டேஸ்ட் ஆப் இந்தியா' உணவகத்தில் இது நடந்ததாக, பியூஷ் அகர்வால் எக்ஸ் தளத்தில் வீடியோக்களுடன் பகிர்ந்தார். 'நாங்கள் முழுமையான சைவர்கள். குழந்தைகள் அறியாமல் சாப்பிட்டுவிட்டனர். எங்கள் உணர்வுகள் புண்பட்டு விட்டன' என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார். உணவக மேலாளரும் சமையல்காரரும் சிக்கன் இருந்ததை ஒப்புக்கொண்டதாகவும், உணவு பாதுகாப்பு துறை விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார். வலைதளவாசிகள் பலர், அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் பதிவிட்டனர்.

இணையம் இருக்கும் வரை: எவரும் அனாதை இல்லை


உறவினர்கள் யாருமில்லை என்பதால், வலைதளவாசிகளை திருமணத்துக்கு அழைத்தார் சீன இளைஞர் ஒருவர். 'பள்ளியில் படிக்கும்போது தந்தை இறந்துவிட்டார்; தாய் மறுமணம் செய்துகொண்டார். நானும், அண்ணனும் ஒருவருக்கொருவர் துணையாக வளர்ந்தோம். இப்போது எனக்கு உறவு என்று யாரும் இல்லை. செலவுக்கு பணம் இருக்கிறது. திருமண விழாவில் கலந்து கொள்வதற்கு உறவுகள் யாருமில்லை' என அவரது வீடியோ உருக்கமாக இருந்தது.

பதிவு வைரல் ஆன நிலையில், வலைதளவாசிகள் படை படையாக கிளம்பி வந்து விட்டனர். ஒவ்வொருவரும் பரிசுப்பொருட்களையும், திருமண ஊர்வலத்துக்கான கார்களையும், சமையல் பொருட்களையும் கொண்டு வந்தனர். சமையல் கலைஞர்கள் இலவசமாக உதவினர். இப்படி நுாற்றுக்கணக்கான பேர் உதவியுடன் அவரது திருமணம் கோலாகலமாக நடந்த வீடியோவும், வலைதளங்களில் பரவி வருகிறது.

அடாவடி செய்த பெண்: போலீஸ் திண்டாட்டம்


மும்பை ஜுஹூவில், பிஎம்டபிள்யூ கார் ஓட்டிவந்த பெண் அடுத்தடுத்து பல வாகனங்கள் மீது மோதினார். அவரை தடுத்து நிறுத்த போக்குவரத்து போலீஸ்காரர் முயற்சித்தபோதும், காரை முன்னோக்கி ஓட்டினார். 'மேடம், காரை நிறுத்துங்கள்' என்று போலீஸ்காரர், கார் பானெட் மீது கை வைத்தபடி கூறியும், அவர் கண்டுகொள்ளவில்லை. காரை அவர் தொடர்ந்து ஓட்ட, போலீஸ்காரர் பின்னோக்கி நகர்ந்து கொண்டே வந்தார். அருகிலிருந்தவர்கள் காரை நிறுத்தும்படி வலியுறுத்தியபோது, தன்னை போலீஸ் துன்புறுத்துவதாக கூறி வாக்குவாதம் செய்தார். அந்த பெண்ணின் செயல், வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, போலீஸ் நடவடிக்கை தீவிரம் ஆகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us