/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர் மீது வழக்கு
/
கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர் மீது வழக்கு
ADDED : செப் 06, 2011 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் மூர்த்தி, 47; இவரது தாயாருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் சரவணனின் தாயாருக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சரவணனை, மூர்த்தி தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சரவணன், மூர்த்தியை கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் டி.நகர் போலீசார் சரவணன் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

