/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இயக்குவதாக ஏமாற்றிய மாணவர் பஸ்கள் பறிமுதல்
/
இயக்குவதாக ஏமாற்றிய மாணவர் பஸ்கள் பறிமுதல்
ADDED : செப் 06, 2011 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருமாம்பாக்கம்: புதுச்சேரியில் மாணவர் சிறப்பு பேருந்தில் மாணவர்கள் அல்லாத மற்றவர்கள் ஏறுவதாக வந்த புகாரையடுத்து அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை ஈடுபட்டனர்.
பி.ஆர்.டி.சி., கண்காணிப்பாளர் குமார், ரங்கசாமி, ராமமூர்த்தி ஆகியோர் தலைமையிலான குழு நேற்று தவளக்குப்பம், பத்துக்கண்ணு, வில்லியனூர் ஆகிய பகுதிகளில் வழியாக செல்லும் சிறப்பு பேருந்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர் சோதனையின்போது அடையாள அட்டை இல்லாத மாணவர்களையும், சீருடை அணியாத டிரைவர்களையும் அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். மேலும் சிறப்பு பேருந்துகளை இயக்காமல், இயங்குவது போன்று அரசை ஏமாற்றிய நான்கு பேருந்துளை பறிமுதல் செய்தனர்.

