/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெத்திசெமினார் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு
/
பெத்திசெமினார் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு
ADDED : செப் 06, 2011 12:58 AM
புதுச்சேரி: பெத்திசெமினார் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
உப்பளம் பெத்திசெமினார் ஆரம்ப பள்ளியில், ஆசிரியர் தினத்தையொட்டி, 25 ஆண்டு கல்வி சேவை புரிந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. முதல்வர் ஜான் போஸ்கோ தலைமை தாங்கினார். துணை முதல்வர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். பங்கு தந்தை மைக்கேல் ஜான் சிறப்புரையாற்றினார். பெத்திசெமினார் ஆரம்பப் பள்ளியில் 25 ஆண்டு பணிபுரிந்த 5ம் வகுப்பு ஆசிரியைகள் உஷா பார்த்தசாரதி, ராஜலட்சுமி, முன்மழ லையர் ஆசிரியை ரேச்சல் பீட்டர் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பள்ளி முதல்வர் ஜான் போஸ்கோ நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பிரைமரி பிரிவு பொறுப்பாளர் ஆசிரியை அனிமா எட்மண்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.