/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் பகீர்... இணைய மோசடி கும்பலுக்கு துணைபோகும் கருப்பு ஆடுகள்: வங்கிகளுக்கு போலீசார் எச்சரிக்கை
/
புதுச்சேரியில் பகீர்... இணைய மோசடி கும்பலுக்கு துணைபோகும் கருப்பு ஆடுகள்: வங்கிகளுக்கு போலீசார் எச்சரிக்கை
புதுச்சேரியில் பகீர்... இணைய மோசடி கும்பலுக்கு துணைபோகும் கருப்பு ஆடுகள்: வங்கிகளுக்கு போலீசார் எச்சரிக்கை
புதுச்சேரியில் பகீர்... இணைய மோசடி கும்பலுக்கு துணைபோகும் கருப்பு ஆடுகள்: வங்கிகளுக்கு போலீசார் எச்சரிக்கை
ADDED : மார் 02, 2025 06:55 AM

அண்மையில் புதுச்சேரியை சேர்ந்த ஒருவர் வங்கி கடன் பெறுவதற்காக தான் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளையை நாடினார். அப்படியே கடனுக்காக அவருடைய சிவில் ஸ்கோரும் சரிபார்க்கப்பட்டது. சிவில் ஸ்கோரும் நன்றாகவே இருக்கவே லோன் கொடுப்பதாக வங்கி ஊழியர்கள் உறுதியளித்தனர். அப்படியே வங்கி ஊழியர்கள், தனிப்பட்ட தகவல்களுக்கான ஆவணங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சில நாட்களுக்குள் வேறு ஒரு நிதி நிறுவனத்தின் பெயரை சொல்லிக்கொண்ட மொபைலில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், உங்களுடைய சிவில் ஸ்கோர் நன்றாகவே உள்ளது. நாங்கள் லோன் தரட்டுமா. குறைந்தவட்டி தான் என்று தொடர்ந்து அழைப்பு விடுத்தனர். அதிர்ந்துபோன அவர் எனக்கு லோனே வேண்டாம் என்று தன்னுடைய வங்கி பக்கமே எட்டி பார்க்கவில்லை.
இதுபோன்ற சம்பவம் தான் இப்போது புதுச்சேரியில் அதிகரித்துள்ளது.
ஏ.டி.எம்., புதுப்பிப்பு, கிரெட்டிட் கார்டு, கே.ஓய்.சி., புதுப்பிப்பு என, வங்கிக்கு சென்று விண்ணப்பித்தும், அடுத்த சில நாட்களில் மர்ம நபர்கள் வேறு ஏதாவது அல்லது அதே வங்கியின் பெயரை சொல்லி மொபைலில் தொடர்பு கொண்டு வருகின்றனர். பணம் பறிப்பதற்காக வலை வீசுகின்றனர்.
வங்கிகளை தவிர நாங்கள் யாரிடமும் தகவல்களை தரவில்லை. ஆனால் எங்களை பற்றிய தகவல்களுக்கு இணைய மோசடி கும்பலுக்கு எப்படி தெரிந்தது என்றே தெரியவில்லை என 200க்கும் மேற்பட்டோர் தற்போது உதவிக்காக புதுச்சேரி சைபர் போலீசில் கதவை தட்டியுள்ளனர்.
அதை தொடர்ந்து வங்கிளுக்கு சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை கடிதம் ஒன்றை வங்கிகளுக்கு அனுப்பியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: புதிய ஏ.டி.எம்.,. அல்லது கிரெடிட் கார்டு விண்ணப்பிக்கும் போதும், கே.ஒய்.சி.. புதுப்பித்தல் போன்ற நடவடிக்கைகளில் வாடிக்கையாளர்களின் விவரங்கள் இணைய மோசடியாளர்களுக்கு கொடுக்கப்படுவதாக எங்களது கவனத்திற்கு வந்துள்ளது. வங்களில் விண்ணப்பித்த உடனேயே வாடிக்கையாளர்கள் இணைய மோசடி கும்பல் மொபைலில் தொடர்பு கொள்ளுகின்றனர். இவர்கள் தங்களை வங்கி மேலாளர்களாகக் காட்டிக்கொண்டு பேசுகின்றனர். இதை நம்பிய வாடிக்கையாளர்களும் ஏமாந்துபோய் பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது.
இது சம்பந்தமாக புதுச்சேரி சைபர் குற்றம் போலீஸ் நிலையத்தில் பல புகார்கள் பதிவாகியுள்ளன. வங்கி ஊழியர்களால் வங்கி கணக்கு பற்றிய தவல்கள் வேண்டுமென்றோ அல்லது தற்செயலாக பரிமாறி இருக்கலாம் என, சந்தேகிக்றோம்.
வாடிக்கையாளர் தகவல்களைப் பாதுகாப்பது வங்கிகளின் முதன்மையான கடமை. வங்கி வாடிக்கையாளர்களின் பற்றி முன்பின் தெரியாதவர்களுக்கு தகவல்களை கசிந்தால் சட்ட ரீதியான கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.
வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை பிறருக்கு கொடுத்தால் ஏற்படும் தண்டனை குறித்த விபரங்களை வங்கி ஊழியர்களுக்கு அந்தந்த வங்கிகள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிரப்படாத வகையில் ரகசிய காப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பாக இருக்கும் என்றே பொதுமக்கள் வங்கியில் கணக்கு ஆரம்பித்து பணத்தை சேமிக்கின்றனர். ஆனால் அங்கும் இருக்கும் சில கருப்பு ஆடுகள் மூலம் இணைய மோசடி கும்பல்களுக்கு தகவல்கள் பகிரப்படுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.