ADDED : செப் 06, 2011 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு மார்க்கண்டேயபுரம் அறக்கட்டளை சார்பில் இலவசமாக ருத்ராட்சம் அணிவிக்கப்பட்டது.
சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட 1008 பக்தர்களுக்கு மார்க்கண்டேயபுரம் அறக்கட்டளை சார்பில் இலவச ருத்ராட்சம் அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சந்திரசேகரன், ராஜன், கீதா முத்தையன், பாண்டியன், சிவமுருகன், ஞானசேகரன், குமார், கணபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.