sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

என்னை முதல்வர் வேட்பாளராக அமித்ஷா என்றோ அறிவித்துவிட்டார்: இபிஎஸ்

/

என்னை முதல்வர் வேட்பாளராக அமித்ஷா என்றோ அறிவித்துவிட்டார்: இபிஎஸ்

என்னை முதல்வர் வேட்பாளராக அமித்ஷா என்றோ அறிவித்துவிட்டார்: இபிஎஸ்

என்னை முதல்வர் வேட்பாளராக அமித்ஷா என்றோ அறிவித்துவிட்டார்: இபிஎஸ்

27


UPDATED : ஜன 30, 2026 07:52 PM

ADDED : ஜன 30, 2026 06:09 PM

Google News

UPDATED : ஜன 30, 2026 07:52 PM ADDED : ஜன 30, 2026 06:09 PM

27


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும், என்னை முதல்வர் வேட்பாளராக அமித் ஷா என்றோ அறிவித்துவிட்டார் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சென்னையில் பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் இபிஎஸ் பேசியதாவது; வாரிசு அரசியல், குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுகின்ற தேர்தல் இந்த தேர்தல். மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம். அதுதான் எங்களின் நோக்கம்.

எங்கள் கூட்டணி (அதிமுக+பாஜ) அமைக்கப்பட்ட போதே கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்று உள்துறை அமைச்சர் முதல் பேட்டியிலே தெரிவித்துவிட்டார்.

அதிமுக ஆட்சியமைக்கும், எங்கள் கூட்டணியின் வேட்பாளர் இபிஎஸ் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக பொய் பிரசாரம் செய்கிறது.

51 ஆண்டுகாலம் பொன்விழா கண்ட கட்சி அதிமுக. 31 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சி புரிந்த கட்சி. சுமார் 2 கோடி தொண்டர்கள் நிறைந்த கட்சி. ஏற்கனவே வளர்ந்து இருக்கிறது.

அதிமுக ஆட்சியில் தான் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, இந்தியாவிலே முதன்மை மாநிலம் தமிழகம் தான் என்ற உயர்ந்த நிலைக்கு எட்டி பிடித்தது. அதிமுக ஆட்சியில் தமிழகம் ஏற்கனவே வளர்ந்து தான் இருக்கிறது.

நாங்கள் ஏற்கனவே தேர்தலுக்கு தயாராகி விட்டோம். தமிழகம் முழுவதும் 181 தொகுதிகளுக்குச் சென்று எழுச்சி பயணத்தை முடித்து இருக்கிறோம். மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.

அதிமுக ஆட்சி


திமுக காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது, அப்படியென்றால் காங்கிரஸுக்கு திமுக பி டீமா? அதிமுக பொறுத்தவரை மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது, எங்கள் கூட்டணிக்கு நாங்கள்தான் தலைமை. அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.

இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே மாநில ஆட்சி திமுக அரசு. விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்யும் ஒரே கட்சி திமுக தான். ஊழலைப் பற்றிப் பேச திமுகவுக்கு அருகதை இல்லை. திமுகவைப் பொறுத்தவரை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் அதிகாரத்துக்கு வரமுடியும். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் அனுபவிக்கிறார்கள். அதுதான் வாரிசு அரசியல். வாரிசு அரசியல் இருக்கக் கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு.

கூட்டணிக்கு அழுத்தமா?


டிடிவி.தினகரன் அதிமுகவில் இருந்தவர் முதலில் அதை புரிந்துகொள்ள வேண்டும். எங்களுக்குள் ஏற்பட்ட பிளவினால் தனி இயக்கம் கண்டார். தமிழகத்திலே மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதில் ஒத்தக் கருத்துடைய கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து போட்டியிட்டு திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும். அந்த எண்ணத்தில் தான் ஒன்றிணைந்து இருக்கிறோம். கூட்டாகத் தான் பேட்டி கொடுத்தோம். நாங்கள் அழுத்தத்திற்கெல்லாம் ஆளாகவில்லை.

எங்கள் கூட்டணியில அங்கம் வகிக்கும் கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்துள்ளன, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்தன. ஆகவே எந்தவொரு கட்சிக்கும் வெற்றி பெறுவதுதான் நோக்கம். தேசிய அளவில் பாஜக தலைமை தாங்கும், மாநில அளவில் அதிமுக தலைமை தாங்கும். வேண்டுமென்றே திட்டமிட்டு ஊடகங்கள் குழப்பத்தை ஏற்படுத்தவே இந்த கருத்தை சொல்லி வருகின்றன.

விஜய் சிறந்த நடிகர்


தவெகவுடன் கூட்டணிக்கு அதிமுக ஆசைப்பட்டதா என்று கேட்கிறீர்கள் சூழ்நிலைக்குத் தக்கவாறு தான் எந்தக் கட்சியும் முடிவெடுக்கும். விஜய் ஒரு சிறந்த நடிகர் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இப்போதுதான் அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் முழுக்க முழுக்க நம்புவது அவருடைய ரசிகர்களை, நாங்கள் முழுக்க முழுக்க நம்புவது மக்களை.

நான் அரசியலுக்கு வந்து 51 ஆண்டுகள் ஆகிறது. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் என்ன பிரச்னை இருக்கிறது என்பது முழுமையாகத் தெரியும். அதேபோல் கட்சியின் அடிமட்டத்தில் இருந்து வந்த காரணத்தினாலே ஓவ்வொரு மட்டத்திலும் என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியும். விஜய் புதிதாக வந்திருக்கிறார் தேர்தல் முடிந்த பின்னர் தான் அவரைப்பற்றிச் சொல்ல முடியும்.

மக்களே எஜமானர்கள்


விஜய் பற்றி உங்கள் கணிப்பு என்ன என்று கேட்கிறீர்கள்? அதை மக்கள் தான் முடிவு செய்வார்கள், நான் முடிவு செய்வது கிடையாது. மக்கள் தான் எஜமானர்கள்.எங்கள் கணிப்பு அதிமுக ஆட்சி அமைக்கும். அதிமுக பெரும்பான்மை இடம் கிடைத்து ஆட்சி அமைக்கும். எத்தனை முனைப் போட்டி என்பதை இப்போது சொல்ல முடியாது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் தெரியவரும். எத்தனை சதவிகிதம் ஓட்டு வாங்குவார் என்பதும் சொல்ல முடியாது. அவர் ஒரு தேர்தலையாவது சந்திக்க வேண்டும். அதன்பின்னர் தான் தெரியும்.

பயனுள்ள பல வாக்குறுதிகளை புதியதாக அறிவித்திருக்கிறோம். எல்லாம் மக்களுக்கு பயனுள்ள திட்டம். ஆண்கள் எல்லோரும் பேருந்துகளில் வேலைக்குச் செல்கிறார்கள் அவர்கள் வைத்த கோரிக்கையின் காரணமாகவே அத்திட்டம் அறிவிக்கப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி மலரப்போகிறது, அப்போது 5 லட்சம் மகளிர்க்கு இருசக்கர வாகனம் மானிய விலையில் வழங்கப்படும். 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி தர்மம்



ஓபிஎஸ்ஸிடம் பேச்சுவார்த்தை நடந்ததா? தினகரன் ஆதரவாளர்கள் இபிஎஸ்க்கு வாக்களிப்பார்களா என்று கேட்டுள்ளீர்கள். கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டால் கூட்டணி தர்மம் என்று இருக்கிறது. கூட்டணியில் யார் போட்டியிட்டாலும் அவரை வெற்றி பெற வைப்பதே எங்கள் இலக்கு. இதில் எந்தக் குழப்பமும் தேவையில்லை. இன்னொன்று, இன்னொரு நபரைப் பற்றிச்(ஓபிஎஸ்சை குறிப்பிடுகிறார்) சொன்னீர்கள், ஏற்கனவே கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் பொதுக்குழுவால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட காரணத்தினால், அவரை சேர்க்க வழியில்லை.

எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பதை விரைவில் வெளியிடுவோம். கூட்டணி அமைத்திருக்கிறோம் சுமூகமாக நிலைப்பாடு நடக்கும். கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள், என்னென்ன தொகுதிகள் என்று இன்னும் பேசவில்லை. தேர்தல் நெருக்கத்தில் அதுபற்றிப் பேசி அறிவிப்போம்.

திமுக கூட்டணிக்குள் கருத்து யுத்தம் நடக்கிறது. திமுக ஆட்சி அமைத்தால் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் பற்றி முழுமையாக தெரியாது. அவர்கள் கூட்டணி நிலைக்குமா, நிலைக்காதா என்று தெரியவில்லை.

இவ்வாறு இபிஎஸ் அந்த நிகழ்ச்சியில் கூறினார்.






      Dinamalar
      Follow us