/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு
/
பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு
பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு
பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு
ADDED : மே 14, 2024 05:11 AM

புதுச்சேரி: வெங்கடசுப்ப ரெட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றதை பாராட்டி, தலைமை ஆசிரியைக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
மடுகரை, வெங்கடசுப்ப ரெட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இந்தாண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக இருந்த அப்பள்ளியின் தலைமையாசிரியை வசந்தியை பாராட்டி முன்னாள் மாணவர்கள் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
இவ்விழாவில் முன்னாள் ஆசிரியர்கள் குமாரசாமி, ஆறுமுகம் மற்றும் நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவை முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் தெய்வநாயகம் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்தனர்.