நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி அந்தோணியர் தேவாலயத்திற்குள் புகுந்து உண்டியலை உடைத்து ரூ. 30 ஆயிரம் பணத்தை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி -கடலுார் சாலையில் ஆட்டுப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் அந்தோணியர் தேவாலயம் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, தேவாலயத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றனர். உண்டியலில் சுமார் ரூ. 30 ஆயிரம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து , அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.