/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிரைவர் மீது பீர் பாட்டில் தாக்குதல்; 4 பேருக்கு போலீஸ் வலை
/
டிரைவர் மீது பீர் பாட்டில் தாக்குதல்; 4 பேருக்கு போலீஸ் வலை
டிரைவர் மீது பீர் பாட்டில் தாக்குதல்; 4 பேருக்கு போலீஸ் வலை
டிரைவர் மீது பீர் பாட்டில் தாக்குதல்; 4 பேருக்கு போலீஸ் வலை
ADDED : ஜூலை 23, 2024 02:26 AM
வில்லியனுார் : டூரிஸ்ட் கார் டிரைவரை பீர்பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் புதுநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் 27, கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியைச் சேர்ந்த அய்யப்பனுடன் கூடப்பாக்கம் ரோட்டில் உள்ள தனியார் பார் எதிரில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் 21, பொறையூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், 22; சம்பத், ௨2; உளவாய்கால் பகுதியைச் சேர்ந்த மணிபால், 27; ஆகிய நான்கு பேரும் முன் விரோதம் காரணமாக சதீஷை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் விழுந்த சதீஷ் அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து நான்கு பேரை தேடி வருகின்றனர்.