/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மிட்டாய் கம்பெனி உரிமையாளர் தற்கொலை
/
மிட்டாய் கம்பெனி உரிமையாளர் தற்கொலை
ADDED : செப் 15, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பிளேடால் கையை கிழித்துக் கொண்டு மிட்டாய் கம்பெனி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் 51, மிட்டாய் கம்பெனி நடத்தி வருகிறார். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், ரமேஷ் மனைவி உத்ரா தனது பிள்ளைகளுடன் பிள்ளையார்குப்பத்தில் உள்ள உறவினர்களின் கருமகாரிய நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் காலை சென்றனர்.
மதியம் வீட்டிற்கு வந்தபோது, ரமேஷ் அவரது இடது கையில் பிளேடால் கிழித்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.