ADDED : ஏப் 11, 2024 04:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தேர்தலை முன்னிட்டு, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, எஸ்.பி., லஷ்மிசவுஜன்யா ஆகியோரின் உத்தரவின் பேரில்,உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்கிட்லா சத்திய நாராயணா, சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் நேற்று மாலை இ.சி.ஆர்., சாலையில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது அவ்வழியாக ஸ்கூட்டியில் வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் பையை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து பையில் இருந்த 77 பிராந்தி பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து கலால்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

