ADDED : ஜூன் 18, 2024 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: திருமணத்திற்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
மூலக்குளம் ஜே.ஜே.,நகரைச் சேர்ந்தவர் செலின்மேரி, இவர் தற்போது கொம்பாக்கம் புதுநகரில் வசித்து வருகின்றார். இவரது மூத்தமகள் மல்லிகா 22, பி.ஏ., மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி மாலை வில்லியனுாரில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து செலின்மேரி கொடுத்த புகாரின் பேரில் முதலியோர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.