/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 27, 2024 01:44 AM

காரைக்கால்: காரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால் தலத்தெரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி துணை முதல்வர் ஜெயா தலைமை தாங்கினார். விரிவுரையாளர் அபிராமி வரவேற்றார். சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் போதைப் பொருள் எவ்வாறு சிறு மூளையை பாதிப்படைய செய்து நம் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கின்றது என்பதை அறிவியல் பூர்வமாக விளக்கி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் நுாலகர் வெங்கட சுப்பிரமணியன் செய்திருந்தார்.இதில் எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பள்ளி பட்டதாரி ஆசிரியை காஞ்சனா நன்றியுரை வழங்கினார்.