/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சைக்கிளிலிருந்து தவறி விழுந்த மீனவர் பலி
/
சைக்கிளிலிருந்து தவறி விழுந்த மீனவர் பலி
ADDED : செப் 17, 2024 04:22 AM
புதுச்சேரி, : சின்னையாபுரத்தில் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மீனவர் உயிரிழந்தார்.
வைத்திக்குப்பம், அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன், 37; மீனவர். மதுபழக்கத்திற்கு ஆளான லட்சுமணன், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் சைக்கிளில் வந்த இவர் சின்னையாபுரம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள விநாயகர் கொட்டகை அருகே கிழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் துாக்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் சிறிது துாரத்திலே மீண்டும் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து கிடந்தார். சுயநினைவு இன்றி கிடந்த லட்சுமணை அவரது மனைவி சாந்தி மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.