/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி ஆசிரியை விபத்தில் படுகாயம்
/
அரசு பள்ளி ஆசிரியை விபத்தில் படுகாயம்
ADDED : பிப் 28, 2025 04:41 AM
பாகூர்: சாலை விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியாங்குப்பம் அடுத்துள்ள மணவெளி பூங்கொடிபுரத்தை சேர்ந்த அனுசியா 31; மூர்த்திக்குப்பம் அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 24ம் தேதி காலை தனது ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். புதுச்சேரி - கடலுார் சாலை தவளக்குப்பம் போலீஸ் நிலையம் அருகே சென்ற போது, அவ்வழியாக சென்ற பைக் திடீரென வலது பக்கமாக திரும்பிய போது, ஸ்கூட்டரின் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த அனுசியா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

