/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் கட்டடங்களில் உள்ள சட்டவிரோத பேனர்கள் உடனடியாக அகற்ற வேண்டும்
/
தனியார் கட்டடங்களில் உள்ள சட்டவிரோத பேனர்கள் உடனடியாக அகற்ற வேண்டும்
தனியார் கட்டடங்களில் உள்ள சட்டவிரோத பேனர்கள் உடனடியாக அகற்ற வேண்டும்
தனியார் கட்டடங்களில் உள்ள சட்டவிரோத பேனர்கள் உடனடியாக அகற்ற வேண்டும்
ADDED : மே 25, 2024 04:04 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டவிரோதமாக தனியார் கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார்.
சாலை பாதுகாப்பு குழு கூட்டம், கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் கலெக்டர் அலுவலக அரங்கில் நடந்தது. சீனியர் எஸ்.பி., கலைவாணன், ஏனாம் மண்டல நிர்வாகி முனுசாமி, மாகி மோகன்குமார், துணை கலெக்டர் வினயராஜ், போக்குவரத்து எஸ்.பி., செல்வம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், சுந்தராஜ், மண்டல போக்குவரத்து அலுவலர் அங்காளன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் ரகுநாதன், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் தற்போதுள்ள போக்குவரத்து சூழ்நிலை, சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை தீவிரப்படுத்துதல், போக்கு வரத்திற்கு இடையூறாக சாலையோரம் பதாகைகள் வைப்பதை தடுப்பது, நிலுவையில் உள்ள சாலை மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிப்பது. சாலை பாதுகாப்பிற்கு தேவையான நிதி ஆதாரம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் விபரம், பைக், கார் மற்றும் ஆட்டோ நிறுத்தங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றி வாய்க்கால் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, போக்குவரத்திற்கு ஏதுவாக ஒழுங்கப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் தனியார் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளனர் சட்டவிரோத விளம்பர பேனர்களை அகற்ற வேண்டும். பேனர் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை தகுதி வாய்ந்த பொறியாளர்கள் மூலம் சான்று பெற்று தர வேண்டும். இல்லாதபட்சத்தில் அவை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

