/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஆக 29, 2024 07:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதியில், சாலை அமைக்கும் பணியை, சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
முதலியார் பேட்டை தொகுதி, ஆதிபராசக்தி நகரில் சாலை அமைக்கும் பணி ரூ.9 லட்சம் செலவில், நகராட்சி மூலம் நடக்க உள்ளது. இதற்கான பூமி பூஜை, முதலியார்பேட்டை எம்.எல்.ஏ., சம்பத் தலைமையில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் வெங்கடாசலம், இளநிலை பொறியாளர் ரமேஷ், நகராட்சி ஊழியர்கள், அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.