ADDED : செப் 14, 2024 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே கார் மோதியதில் மயில் பரிதாபமாக இறந்தது.
புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார் குப்பம் செல்லும் சாலையில் நேற்று மாலை ஆண் மயில் ஒன்று இரைதேடி தாழ்வாக பறந்து சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த கார் மயில் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் படுகாயமடைந்த மயில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாலையில் இறந்து கிடந்த மயிலை மீட்டனர்.
பின்னர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, வனத்துறை ஊழியர்களிடம் மயிலின் உடலை ஒப்படைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.