தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஐ.ஆர்.பி.என்., எஸ்.ஐ., பணிக்கான உடல் தகுதி தேர்வு துவக்கம்

ஐ.ஆர்.பி.என்., எஸ்.ஐ., பணிக்கான உடல் தகுதி தேர்வு துவக்கம்

ஐ.ஆர்.பி.என்., எஸ்.ஐ., பணிக்கான உடல் தகுதி தேர்வு துவக்கம்


ADDED : ஆக 13, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி காவல் துறையில் ஐ.ஆர்.பி.ன்., சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான உடல் தகுதி, உடற்திறன் தகுதி தேர்வினை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.

புதுச்சேரி காவல்துறையில் ஐ.ஆர்.பி.ன்., பிரிவில் காலியாக உள்ள 8 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மே 18ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மொத்தம் 1,871 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய பரிசீலனைக்கு பிறகு தேர்வர்களுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, அவர்களுக்கான உடல் தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு, கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நேற்று (13ம் தேதி) துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. இப்பணியினை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டு, உடற்திறன் தேர்வை துவக்கி வைத்தார். இதில், டி.ஜி.பி., ஷாலினி சிங்., டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், ஐ.ஆர்.பி.ன்., காமண்டென்ட்  அனிதா ராய் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

உடல் தகுதி தேர்விற்கு பங்கேற்கும் தேர்வர்கள் தங்களது அரசு அடையாள அட்டையை (அசல்) கொண்டு வரவேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us