UPDATED : ஆக 13, 2026 07:20 PM
ADDED : ஆக 13, 2026 07:11 PM
புதுச்சேரி: சுதந்திரதினத்தையொட்டி, கலை பண்பாட்டுத்துறை சார்பில், 3 நாட்கள் கலை விழா ஆகஸ்ட் 15 ல் துவங்குகிறது.
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னகப் பண்பாட்டுத் துறை சார்பில், கலை விழா கடற்கரை சாலை காந்தி திடலில் 15ம் தேதி துவங்கி வரும் 17ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.
சுதந்திரதின விழாவையொட்டி, துவங்கம் இந்த கலை விழா 15ம் தேதி புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடல், கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபம், மடுகரை மந்தைவெளி திடல், உறுவையாறு அரசு கலையரங்கம், திருக்கனுார் மாரியம்மன் கோவில் திடல் ஆகிய பகுதிகளில் நடக்கிறது.
மாலை 6:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை நடக்கும் இவ்விழாவில், அஸ்ஸாம், உத்ரகாண்ட், ஹரியனா, மேற்கு வங்களாம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், குஜராத், தெலுங்கனா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.
