ADDED : ஆக 13, 2026 07:01 PM
புதுச்சேரி: புதுச்சேரி, புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நல பணித்திட்டம் சார்பில் சர்வதேச இளைஞர் தின நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தாளாளர் பிரெட்ரிக் ரெஜிஸ் வரவேற்றார். பள்ளியின் முதல்வர் ஸ்டெல்லா வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில், பேட்ரிக் பள்ளியில் படித்து சாதனை புரிந்த முன்னாள் மாணவ, மாணவிகள் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இந்த ஆவணப்படம் பள்ளியின் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கொடுக்கும் விதமாக அமைந்திருந்தது. பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி சாந்த சீலன் நன்றி கூறினார்.
முன்னதாக, புதுச்சேரி சுதந்திரப் போராட்ட தியாகி மோகன லிங்கத்தை, நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் அவரது வீட்டில் சந்தித்து புதுச்சேரியின் விடுதலைப் போராட்டத்தை பற்றி கேட்டறிந்தார். பள்ளியின் சார்பாக அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
