ADDED : ஆக 13, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.
அபிேஷகப்பாக்கம், டி.என்., பாளையம், ஆண்டியார்பாளையம், கொருக்கமேடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு தலா 1 லட்சம் வீதம், 18 நபர்களுக்கு ஆணையை ராமு எம்.எல்.ஏ., வழங்கினார். நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை இளநிலைப்பொறியாளர் மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
