/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பத்ரகாளியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு வீதியுலா
/
பத்ரகாளியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு வீதியுலா
ADDED : மே 22, 2024 01:12 AM

காரைக்கால் : காரைக்கால் அம்பகரத்துார் பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழாவை முன்னிட்டு புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது.
காரைக்கால் திருநள்ளார் அடுத்த அம்பகரத் துாரில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா கடந்த 1ம் தேதி காப்புக் கட்டுதலுடன் துவங்கியது.
விழாவை முன்னிட்டு தினத்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது.முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் பத்ரகாளியம்மன் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று மகிஷ சம்ஹார நினைவு பெருவிழா நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று இரவு எல்லை ஓடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

