நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: கல்மண்டபம் முத்துமாரியம்மன் கோவில் செடல் மற்றும் 108 பால்குடம் அபி ேஷக விழா நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த கல்மண்டபம் காலனியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா கடந்த 9 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் காலை அம்மனுக்கு அபி ேஷகம் ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.
நேற்று காலை பெண்கள் அய்யனாரப்பன் கோவிலில் இருந்து 108 பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபி ேஷக ஆராதனைகள் நடந்தது. மாலை 3 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் அலகு குத்தியும், தேர், கார், வேன் உள்ளிட்டவைகள் இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.