/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கல்
/
அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கல்
அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கல்
அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கல்
ADDED : ஏப் 02, 2024 03:50 AM
புதுச்சேரி : புதுச்சேரி அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 400க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளது. அதில், அரசு துவக்கப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளுக்கு என தனி கல்வி வாரியம் இல்லததால், புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகள் தமிழக அரசின் பாடத்திட்டத்தையும், ஆந்திராவையொட்டியுள்ள ஏனாம் பகுதியில் உள்ள பள்ளிகளில், ஆந்திரா மாநில கல்வி வாரியத்தையும், மாகியில் உள்ள அரசு பள்ளிகள், கேரள அரசின் பாடத்திட்டத்தையும் பின்பற்றி வந்தன.
இந்நிலையில், இந்த கல்வியாண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், 1 முதல் 12ம் ஆண்டு வகுப்பு வரை மத்திய அரசு பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மத்திய அரசு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது.
அதயைடுத்து, நேற்று புதுச்சேரியில், உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டது. மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர்.
கல்வியாண்டு முதல் நாளான நேற்று மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால், மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் முழுவதும் பள்ளிகள் நடக்கும்.
கோடை விடுமுறை மே மாதம் விடப்பட்டு ஜூன் மாத்தில் இருந்து பள்ளிகள் இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

