தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எலி பேஸ்ட் சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை

எலி பேஸ்ட் சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை

எலி பேஸ்ட் சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை


ADDED : ஜூலை 18, 2024 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2024 11:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் அருகே அல்சர் பிரச்னையால் மனமுடைந்த இளம்பெண் எலிபேஸ்ட்சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வில்லியனுார் அருகே உள்ள கூடப்பாக்கம் வரதராஜ பெருமாள் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சுபாஷ். விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது.

இரண்டாவது மகள் சுஜா, 25; இவருக்கு அல்சர் பிரச்னை இருந்துள்ளது.

இந்நிலையில் வடமங்கலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த அவர் கடந்த 9ம் தேதி வேலைக்கு சென்று இரவு வீட்டிற்கு வந்த சுஜா சோர்வாக இருந்ததை கண்ட பெற்றோர், உடல்நிலை சரியில்லையா என கேட்டுள்ளனர்.

அப்பொழுது அல்சர் பிரச்னையால் கடும் வயிற்று வலி ஏற்பட்டதால் வலி தாங்க முடியாமல் எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

உடன் சுஜாவை மீட்டு கதிர்காமம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். முதல் உதவி சிகிச்சை பெற்று சென்னை ஸ்டாலின் மருத்துவமனையை கொண்டு சென்றனர்.

தொடர் சிகிச்சை பெற்று வந்த சுஜா நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சுபாஷ் கொடுத்த புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us