நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அதிக மாத்திரை சாப்பிட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் வைப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டாணி 45, கூலித்தொழிலாளி. தற்போது வில்லியனுார் நவசன்ன வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். குடிப்பழக்கம் உள்ள தண்டபாணி கடந்த 5 ம் தேதி மதியம் அதிகமாக மாத்திரை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். உறவினர்கள் மீட்டு கதிர்காமம் அரசு பொது மருத்துமவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.