ADDED : செப் 06, 2011 12:58 AM
புதுச்சேரி: இந்திய தர வட்டக் குழு சம்மேளனம் சார்பில் பல்வேறு தொழிற்சாலைகளை சேர்ந்த தரக்கட்டுப்பாட்டாளர்களுக்கான மாநாடு நடந்தது.
இந்திய தர வட்டக்குழு சம்மேளனம், கோத்ரேஜ் நுகர்வோர் நிறுவனம் இணைந்து பல்வேறு தொழிற்சாலைகளை சேர்ந்த தரக்கட்டுப்பாட்டாளர்களுக்கு நிறுவனத்தின் மூலம் உள்ளுரத்தை வலுப்படுத்துதல் என்ற கருத்தை மையமாகக் கொண்டு 20வது மாநாடு நடந்தது. வில்லியனூர் ஆச்சார்யா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த மாநாட்டை மிச்செலின் இந்தியா தமிழ்நாடு டயர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் நிக்கோலா பியூமாண்ட் துவக்கி வைத்தார். சென்னை தர வட்டக் குழு தலைவர் பழனியப்பன் வரவேற்றார். மாநாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அணிகள், தங்கள் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை வெளிப்படுத்தினர். மாநாட்டு நிறைவு விழா நேற்று நடந்தது. வேர்ல்பூல் நிறுவன ஆர்.டி.சி. இயக்குனர் வெங்கடேசன் பரிசுகளை வழங்கினார். அமைப்பாளர் குணசேகர் நன்றி கூறினார்.