/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாஸ்பேட்டை உள்விளையாட்டரங்கில் ரூ.1 கோடியில் மரத்தாலான ஆடுகளம்
/
லாஸ்பேட்டை உள்விளையாட்டரங்கில் ரூ.1 கோடியில் மரத்தாலான ஆடுகளம்
லாஸ்பேட்டை உள்விளையாட்டரங்கில் ரூ.1 கோடியில் மரத்தாலான ஆடுகளம்
லாஸ்பேட்டை உள்விளையாட்டரங்கில் ரூ.1 கோடியில் மரத்தாலான ஆடுகளம்
ADDED : ஆக 29, 2024 07:13 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை உள் விளையாட்டு அரங்கில் ரூ.1 கோடி மதிப்பில் மரத்தால் தரை அமைக்கும் பணிகள் முடிந்து தயாராக உள்ளது.
புதுச்சேரி மாநில மாணவர்கள், அகில இந்திய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு பயிற்சிகள் பெற லாஸ்பேட்டை தாகூர் கல்லுாரி அருகே கடந்த 2017ம் ஆண்டு ரூ. 7 கோடி மதிப்பில் உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது.
38 மீட்டர் அகலம், 71 மீட்டர் நீளம் கொண்ட அரங்கில் வாலிபால், கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், பேட்மிட்டன், வலு துாக்கும் பயிற்சி கூடம், விளையாட்டு வீரர்கள் உடை மாற்றும் அறைகள் கட்டப்பட்டது. 500 பேர் அமர்ந்து விளையாட்டுக்களை பார்க்கும் கேலரியும் அமைக்கப்பட்டது.
கடந்த 2018 ஜூலை மாதம் உள் விளையாட்டு அரங்கை, துணை ஜனாபதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
அரங்கு திறக்கப்பட்டு பல மாதங்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. கடந்த 2019 ஆண்டு விளையாட்டு அரங்கும் பயன்பாட்டிற்கு வந்தது.
உள் விளையாட்டு அரங்கின் தரை தளம் கான்கிரீட் தளமாக அமைக்கப்பட்டு இருந்ததால், விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள வீரர்கள் சிரமப்பட்டனர்.
அதனால் ரூ.1.05 கோடி மதிப்பில், ஒயிட் மேப்பல் என்ற முறையில் மரத்தால் ஆன தளம் அமைத்துள்ளனர். 38 மீட்டர் அகலம், 71 மீட்டர் நீளத்திற்கு மரத்தால் ஆன தளம் அமைக்கும் பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது.