/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெரிய பாளையத்தம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ.10 லட்சம் வழங்கல்
/
பெரிய பாளையத்தம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ.10 லட்சம் வழங்கல்
பெரிய பாளையத்தம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ.10 லட்சம் வழங்கல்
பெரிய பாளையத்தம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ.10 லட்சம் வழங்கல்
ADDED : ஆக 30, 2024 05:59 AM

புதுச்சேரி: பெரியபாளையத்தம்மன் கோவில் திருப்பணிக்கு, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை, முதல்வர் ரங்கசாமியிடம் பெற்று, கோவில் நிர்வாகிகளிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வழங்கினார்.
உப்பளம் தொகுதி, நேதாஜி நகரில் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோவில் திருப்பணிக்கு இந்து அறநிலையத்துறை மூலம், நிதியை பெற, அந்த தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி, அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரனிடம் கோரிக்கை வைத்தார்.
முதல்வர் ரங்கசாமியின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக திருப்பணிக்கு நிதி வழங்க வலியுறுத்தினார். இந்து அறநிலையத்துறை மூலம், ரூ.10 லட்சத்திற்கான காசோலையை, முதல்வர் ரங்கசாமி நேற்று அனிபால் கென்னடியிடம் வழங்கினார்.
இந்த காசோலையை கோவில் நிர்வாகிகள் உடன் இருந்து பெற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து முதல்வர்வருக்கு சால்வை அணிவித்து அனிபால் கென்னடி அவருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் காசோலை பெற்றுக் கொண்ட கோவில் நிர்வாகிகள் திருப்பணிக்கு மேலும் பணம் தேவைப்படும் என அனிபால் கென்னடியிடம் தெரிவித்தனர்.
அதற்கு அவர், முதல் தவணை பெற்ற பணத்திற்கு உண்டான கட்டுமான பணிகளை விரைந்து முடித்து விட்டு, சரியான கணக்கு வழக்குகளை அரசிடம் ஒப்படைத்தால், இரண்டாவது தவணையை உடனடியாக பெற்றுத்தருவதாக உறுதி அளித்தார். இதையடுத்து கோவில் நிர்வாகிகள், ஊர் பஞ்சாயத்தார்கள் அவருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.