/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதுபான விற்பனையில் விதிமீறல் 105 வழக்குகள்: 32 பேர் கைது ரூ.9.48 லட்சம் அபராதம்
/
மதுபான விற்பனையில் விதிமீறல் 105 வழக்குகள்: 32 பேர் கைது ரூ.9.48 லட்சம் அபராதம்
மதுபான விற்பனையில் விதிமீறல் 105 வழக்குகள்: 32 பேர் கைது ரூ.9.48 லட்சம் அபராதம்
மதுபான விற்பனையில் விதிமீறல் 105 வழக்குகள்: 32 பேர் கைது ரூ.9.48 லட்சம் அபராதம்
ADDED : ஏப் 10, 2024 01:59 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் மதுபான விற்பனையில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக 105 வழக்கு பதிவு செய்து 32 பேர் கைது செய்து, ரூ.9.48 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;
புதுச்சேரியில் லோக்சபா தேர்தலையொட்டி, மதுபான கடத்தல், பதுக்கல் மற்றும் வாக்காளர்களுக்கு மதுபானம் வினியோகத்தை கண்காணிக்க கலால் துறையால் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, தேர்தல் நடத்தும் அதிகாரி, துணை தேர்தல் நடத்தும் அதிகாரி, செக்டர் அதிகாரிகள், பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுவினருக்கு இன்ஸ்பெக்டருக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி எல்லையில் 15 இடங்களில் சோதனை சாவடி அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபான கடைகள், தொழிற்சாலைகளில் சி.சி.டி.வி கேமராக்காள் பொருத்தி கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருகிறோம்.
சட்டம் ஒழுங்கு பாதுகாக்க அனைத்து மதுபான கடைகளும் இரவு 10:00 மணிக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவு முன்னிட்டு வரும் 17 முதல் 19 வரையிலும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் ஜூன் 4ம் தேதி மதுபானகள் கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.மதுபான கடத்தல், விதிமீறல்கள் குறித்து புகார் தெரிவிக்க விரும்புவோர், கலால் துறையின் கட்டுப்பாட்டு அறை 0413-2252493 என்ற தொலைபேசியில் தகவல் தெரிவிக்கலாம்.
கலால் துறை, போலீஸ், பறக்கும்படையினரால் விதிமீறல்களுக்காக 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ரூ. 3.99 லட்சம் மதிப்பிலான 1761 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 9.48 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

