/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கதிர்வேல் சுவாமி கோவிலில் 108 பால்குட, சங்காபிேஷகம்
/
கதிர்வேல் சுவாமி கோவிலில் 108 பால்குட, சங்காபிேஷகம்
கதிர்வேல் சுவாமி கோவிலில் 108 பால்குட, சங்காபிேஷகம்
கதிர்வேல் சுவாமி கோவிலில் 108 பால்குட, சங்காபிேஷகம்
ADDED : மே 22, 2024 01:11 AM
புதுச்சேரி : கதிர்வேல் சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவத்தில் 108 பால்குட மற்றும் சங்காபிேஷக வழிபாடு நடக்கிறது.
கதிர்காமம் , கதிர்வேல் சுவாமி கோவிலில் சுப்ரமணிய சுவாமி அவதார வைகாசி விசாகத்தையொட்டி, 108 பால்குட மற்றும் சங்காபிேஷகம், இன்று நடக்கிறது.
இதையொட்டி காலை, 7:00 மணிக்கு, 108 சங்கு ஸ்தாபனமும், பூஜையும் நடக்கிறது.
மேலும், 108 பால் குடங்கள் முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, மாடவீதியாக வலம் வந்து, முருகன் கோவிலை அடைகிறது.
காலை 9:00 மணிக்கு மகா அபிேஷகமும், 108 பால் குட அபிேஷகமும் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு, மகா பூர்ணாகுதியுடன் கலசம் புறப்படுகிறது.
காலை 11:00 மணிக்கு, 108 சங்காபிேஷகம் நடக்கிறது. மேலும், பகல் 12:00 மணிக்கு, மகா தீபாராதனையும், பிரகார உற்சவமும் நடக்க உள்ளது.
இதைத்தொடர்ந்து, பகல் 1:00 மணிக்கு, பிரசாதம் வழங்கப்படுகிறது.

