ADDED : மே 20, 2024 04:04 AM
பாகூர், : உலக நன்மை வேண்டி, பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், இன்று (20ம் தேதி) 108 கலசாபிஷேகம் நடக்கிறது.
பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், அக்னி நட்சத்திரத்தையொட்டி, கடந்த 4ம் தேதி முதல் சுவாமிக்கு தாராபிஷேகம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உலக நன்மை வேண்டி, சென்னை மணிமங்கலம் படப்பை புஜ்ஜிய ஸ்ரீ முரளிதர சுவாமிகளின் அருளாசியுடன் இன்று (20ம் தேதி) ஸ்ரீமூலநாதர் சுவாமிக்கு 108 கலசாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதனையோட்டி, காலை 7.30 மணிக்கு கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு, 11 முறை ருத்ரபாராயணம், விசேஷ ேஹாமங்கள் நடக்கிறது.
அதனை தொடர்ந்து, 10.00 மணிக்கு மூலநாதர் சுவாமிக்கு 108 கலசாபிஷேகம் செய்து, மகா தீபாரதனை நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அர்ச்சகர்கள் செய்துள்ளனர்.

