நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : காட்டேரிக்குப்பம், திரவுபதியம்மன் கோவில் வகையறாவுக்குட்பட்ட முத்தால மாரியம்மன் கோவில் திருப்பணி விரைவில் துவங்க உள்ளது.
இதையொட்டி, ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையான நேற்று காலை 7:30 மணிக்கு அம்மன் நகர் வேம்படி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து 108 பால்குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, மாடவீதி வழியாக சென்றது. காலை 9:00 மணிக்கு கோவிலுக்கு சென்று, முத்தால மாரியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.