/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேப்பூர் அருகே வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் 11 பேர் காயம்: 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
/
வேப்பூர் அருகே வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் 11 பேர் காயம்: 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
வேப்பூர் அருகே வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் 11 பேர் காயம்: 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
வேப்பூர் அருகே வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் 11 பேர் காயம்: 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 16, 2024 06:38 AM

வேப்பூர்: வேப்பூர் அருகே டாரஸ் லாரி, ஈச்சர் லாரி, இரண்டு கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 11 பேர் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டைக்கு (டி.என்12 -ஏவி 3767) ஈச்சர் லாரி நேற்று நள்ளிரவு புறப்பட்டது.
சென்னை, பூந்தமல்லியை சேர்ந்த கார்த்திக், 30, லாரியை ஓட்டினார். நேற்று பகல் 11:00 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் மேம்பாலம் வந்த போது, எதிரே கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆசனுாருக்கு சென்ற (டி.என்52 -ஏசி 7225) டாரஸ் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை கடந்து, ஈச்சர் லாரி மீது மோதியது.
தொடர்ந்து, ஈச்சர் லாரி பின்னால் வந்த பலேனோ கார் (டி.என்., 81 வி 6469) மீது கவிழ்ந்தது. அதையடுத்த வந்த எர்டிகா கார் (டி.என்12 -ஏஇசட் 6544) டாரஸ் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதில், பலேனோ காரில் வந்த திட்டக்குடி, வதிஷ்டபுரம் அழகுராஜா, அவரது மனைவி மாலதி, மகன் சித்தார்த் ஆகியோர் காரிலிருந்து குதித்து காயத்துடன் உயிர் தப்பினர்.
ஈச்சர் லாரி டிரைவர் கார்த்திக், 30, திருவாரூர் டாரஸ் லாரி டிரைவர் அருள்தாஸ், 26, எர்டிகா காரில் வந்த டிரைவர் சென்னை அயனபாக்கம் வெற்றிவேல், 45; அடையாறு சீனிவாசன், 37, அவரது தாய் ஜெயந்தி, 60, மனைவி வைஷ்ணவி, 36, தம்பி நரசிம்மன், 35, நரசிம்மன் மனைவி சுருதி, 30, ஆகியோர் காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள், தேசிய நெடுஞ்சாலை மீட்பு குழுவினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.
திட்டக்குடி டி.எஸ்.பி., மோகன், வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.