ADDED : ஆக 09, 2024 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் பல இடங்களில் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட சிகரெட் மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அதையடுத்து, நேற்று முன்தினம் சேதராப்பட்டில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா விற்ற அருணாசலம், 49; என்பவரை சேதராப்பட்டு போலீசார் கைது செய்தனர்.
அதே போல வில்லி யனுார், உருளையன் பேட்டை, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், பாகூர் பகுதிகளில் பெட்டி கடைகளில் சிகரெட் மற்றும் குட்கா பொருட்கள் விற்ற ராமச்சந்திரன், 55; வசந்தகுமார், 42; அலெக்சா, 34; ஆனந்த, 63; சரவணன், 32; சக்திவேல், 41; நாகராஜன், 51; நக்கீரன், 47; சீனிவாஸ், 48; சந்துரு, 49; ஆகியோரை கைது செய்தனர்.