/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தவளக்குப்பத்தில் 12 மணி நேரம் மின் நிறுத்தம் பொதுமக்கள் துாக்கமின்றி கடும் அவதி
/
தவளக்குப்பத்தில் 12 மணி நேரம் மின் நிறுத்தம் பொதுமக்கள் துாக்கமின்றி கடும் அவதி
தவளக்குப்பத்தில் 12 மணி நேரம் மின் நிறுத்தம் பொதுமக்கள் துாக்கமின்றி கடும் அவதி
தவளக்குப்பத்தில் 12 மணி நேரம் மின் நிறுத்தம் பொதுமக்கள் துாக்கமின்றி கடும் அவதி
ADDED : ஆக 31, 2024 02:22 AM
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் பகுதியில் 12 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்ததால், இரவு முழுவதும் பொதுமக்கள் துாக்கம் இன்றி அவதிப்பட்டனர்.
புதுச்சேரி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 7:00 அளவில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
மழை பெய்யும் போது காற்று அடித்ததால், காட்டுக்குப்பம் துணை மின் நிலையத்தில் இருந்து தவளக்குப்பம் பகுதிக்கு வரும் உயரழுத்த மின் கம்பி மீது மரம் விழுந்தது. அதனால்,தளக்குப்பம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மழை விட்ட பிறகு மின்துறை அதிகாரி, ஊழியர்கள் மூலம் தானாம்பாளையம், பூராணாங்குப்பம், அபிேஷகப்பாக்கம் தெப்பக்குளம் ஆகிய பகுதியில் மின் கம்பிகளில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். நள்ளிரவு வரை மரங்களை அகற்றி சீரமைக்கும் பணி நடந்தது.
இந்த பணியால், நேற்று முன்தினம் இரவு முழுவதும் தவளக்குப்பம் பகுதியில் மின்சாரம் இல்லாமல் இருந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டது. 12 மணி நேரம் மின்சாரம் இல்லாமல், கொசு கடியால், பொதுமக்கள் துாக்கம் இல்லாமல் கடும் அவதிப்பட்டனர்.
தவளக்குப்பம் மின்துறை அலுவலகத்தில், குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்கள் இருப்பதால், பலத்த காற்று ஏற்படும் போது, மரங்கள் மின் கம்பிகளில் விழுந்து, மின்தடை ஏற்படுகிறது. அதை சீர் செய்ய போதிய ஊழியர்கள் இல்லாமல் இருப்பதால், மின்சாரம் வழங்க காலதாமம் ஏற்படுவதாக, மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.