/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் மாவட்டத்தில் 1.23 சதவீதம் தேர்ச்சி குறைவு
/
காரைக்கால் மாவட்டத்தில் 1.23 சதவீதம் தேர்ச்சி குறைவு
காரைக்கால் மாவட்டத்தில் 1.23 சதவீதம் தேர்ச்சி குறைவு
காரைக்கால் மாவட்டத்தில் 1.23 சதவீதம் தேர்ச்சி குறைவு
ADDED : மே 10, 2024 11:40 PM
காரைக்கால்: காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 78.20 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை விட 1.23 சவீதம் குறைவாகும்.
காரைக்கால் மாவட்ட கல்வித்துறை சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கியது.
இதில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 2450 பேர் தேர்வு எழுதினர்.நேற்று தேர்வு முடிவில் 1916 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில் காரைக்கால் பகுதியில் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 78.20 சதவீதம். இதில் அரசு பள்ளி களில் 65.31 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
காரைக்கால் பகுதியில் 100 சதவீதம் பெற்ற 17 பள்ளி களில் ஒரு அரசு பள்ளி மட்டும் 100 சதவீதம் தேர்ச்சிபெற்றுள்ளது.
கடந்த ஆண்டு 79.43 சதவீதமாக இருந்த தேர்ச்சி, இந்தாண்டு 78.20ஆக குறைந்துள்ளது.
இதன் மூலம் கடந்தாண்டை விட இந்தாண்டு 1.23 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.